சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

மேச ராசியில் காலப்புருசன் (சூரியன்) இருந்த வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்திராப் பௌர்ணமி வந்தது. இப்பொழுது காலபுருசன் (சூரியன்) நகர்ந்து 30 திகிரியை கடந்து மீன ராசிக்குள் வந்து விட்டதால் இனிமேல் பெளர்ணமிகள் நட்சத்திரங்களில் மாறித்தான் வரும். காலபுருசன் (சூரியன்) எங்கு செல்கிறானோ , சூரியனோடு பூமியும், சந்திரனும் சென்றுதான் ஆக வேண்டும்.
மேசராசியில் சூரியன் ஏப்ரல் 14-ல் வருகிறான் என்று வானத்தை பார்க்காமலே சொல்லும் இதே பிராமனர்கள் வரும் சித்ரா பெளர்ணமியை ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், வட மாநிலங்களிலும் எப்பொழது கொண்டாடுகிறார்கள் என கவனியுங்கள். வரும் ஏப்ரல் – 5 ல் வரும் பௌர்ணமியைத்தான் கொண்டாடுவார்கள். அங்கே இருப்பவர்களுக்கு பெளர்ணமி எங்கே வந்தாலும் பராவாயில்லை. இங்கே இருப்பவர்களுக்கு மட்டும் சித்ரா பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்திலே தான் வர வேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் இப்படி ஒரு கட்டுக் கதை பரப்ப பட்டுக் கொண்டு உள்ளது. நம் பருவங்கள் ஒரு மாதம் பின் தள்ளி சென்று விட்டது . அதுவும் இவர்கள் கூறும் ஏப்ரல் – 14-ல் மேசம் வருவதில்லை ஏப்ரல் 22-ல் தான் வருகிறது. சூரியன் 6 திகிரி நகர்ந்ததை இவர்கள் தமிழ் நாட்டில் மட்டும் மறைக்கிறார்கள். வானம் பாருங்கள். போன பெளர்ணமியில் குச்சிக்கு (கொடிமரத்திற்கு) வடக்கில் பெளர்ணமி வந்தது. இந்த முறை சூரியன் குச்சிக்கு வடக்கில் சென்று கொண்டு உள்ளது. ஆனால் பௌர்ணமி நிலவு குச்சிக்கு தெற்கே உதிக்கும். இது தான் சித்ரா பெளர்ணமியின் அடையாளம்.
விண் கணக்குகளைத் தான் பஞ்சாங்கமாக நம் திருமால் தந்தார். ஆனால் வானத்தையே பார்க்க மாட்டோம். மாற்றங்களை கணக்குகளில் மாற்ற மாட்டோம் , என அடம் பிடிப்பதால் இனி பயனில்லை. இதில் நீங்களும் மாட்டிக் கொண்டு உள்ளீர்கள். உங்களையும் பயன்படுத்துகிறார்கள் என புரிந்து , சோதிடம் பார்ப்பவர்கள் இந்த ராசிகளும், நட்சத்திரங்களும் வானில் எங்கே இருக்கிறது என தேடி பாருங்கள். அதன் சுவை அழகு தெரிந்தால் பொய் சொல்ல முடியாது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *