அயனாம்சம் என்றால் என்ன?
சக்தி மைய பின் சுழற்சி தான் அயனாம்சம். சக்தி மைய பின் சுழற்சியை குறிப்பது தான் நம் கோவிலின் கருவறைகள். சக்திமையம் தான் கருமையம். அண்டத்தில் 8 வகையான சக்திகள் உள்ளன. அவை எதுவும் கண்ணுக்கு புலப்படாது. ஆனால் அதன் இயக்கத்தை உணர முடியும். ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் ஒரு கருமையம் உண்டு. நம் புவனம் (Cluster) கோடிக்கனக்கான சூரியன்களை உள் அடக்கியது. தனித்தனியாக தெரியும் அத்தனை சூரியன்களும் நம் புவனத்தை சேர்ந்தது தான். நம் புவனத்தைச் சேர்ந்த அனைத்து சூரியன்களும் தனித்தனியான சக்தி மையங்களை கொண்டு இருக்கும். இப்படி சகதிமையத்தை மையமாக வைத்து நம் சூரியன் கிழக்கு மேற்காக 360 திகிரி வட்ட ராசி பாதையில், பூமிக்கு எதிரான திசையில் சுற்றிக் கொண்டு உள்ளது. ஆனால் நம் அனைத்து சக்தி மையங்களும் சீரான வேத்துடன் , 24 திகிரி வடக்கு நோக்கிய கோணத்தில் சென்று கொண்டு உள்ளது. அது புமியின் வடக்கு அச்சின், நேரே உள்ள துருவ நட்சத்திரத்தினைக் கொண்டு உணரலாம்.
நம் தமிழ் இலக்கியங்கள் மறை நூல்களில் 3500 வருடங்களுக்கு முனபே கடலோடிகள் , இரவில் திசை அறிய துருவ விண்மீனை பயன்படுத்தி கடல் பயணம் செய்துள்ளார்கள் என்பது பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகளோ procession எனும் பூமியின் அச்சு 24 திகிரி சீரான வேகத்தில் சுழல்வதாக கூறுகிறார்கள். ஆனால் நம் பூமியின் அசசு மூன்று முறைதான் மாறும். இது வேறு கதை. நாம் புரிந்து கொள்ள வேண்டியது அயனாம்சம் என்று இவர்கள் கூறுவது தமிழில் கருமைய பின் சுழற்சி கணக்குதான். Golden ratio முறையில் சிவத்திலிருந்து வந்த நம் சூரியன், ஈர்த்தல் எனும் magnetic சகதியை பெற்று மீண்டும் சிவத்தை நோக்கி திரும்பி சென்று கொண்டு உள்ளது. இந்த சக்திமையம் சிவத்தை நோக்கிய கோணம் 24 திகிரி என்றும் மாறாது. இதைத் தான் நாம் அம்மன் கோயில்களை வடக்கு நோக்கி அமைத்து வழிபடுவோம். இந்த சக்தி மைய பின் சுழற்சி காலம் 1332 வருடங்கள்.
சக்தி மைய பின் சுழற்சி என்பது ,
கிழக்கு மேற்காக 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில், சுற்றிக் கொண்டு இருக்கும் நம் சூரியனை வடக்கு நோக்கி இழுத்துக் கொண்டு சிவத்தை நோக்கிப் பின் நோக்கி நகர்கிறது. கிழக்கு மேற்காக சுற்றும் சூரியன் ராசி நட்சத்திர பாதையில் 24 திகிரியில் நிற்காது . அது 360 திகிரியாக 12 ராசிகளிலும் வலம் வரும். எப்பொழதும் மேசத்தில் நின்று கொண்டு இருக்காது. சூரியன் மேசத்தை கடந்து மீனத்தில் முழுமையாக இருக்கிறது. அது கும்பத்திலும் பயணம் செய்யும். அது கரணம். (நிராயணம்.) நிராயணம் 24 திகிரியில் என்றும் இருக்கும் என்பது அவர்களின ஊகம். ஆனால் அது உண்மையல்ல. நாம் குச்சி நட்டு வடக்கில் முதல் ராசியாக மீனம் இருப்பதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். ஒரு சம நாள் தேதி மாற எடுத்துக் கொள்ளும் காலம் தான் 1332 வருடங்கள். இது சூரிய சுற்றின் 18 திகிரி நகர்வுக்குச் சமம். 20 x 18 = 360 திகிரி சூரியன் நகர்ந்தால் 20 முறை சம நாள் மாறி இருக்கும்.
அம்சம் என்றால் கோணம் என்கிறார்கள். அயணம் என்றால் பயணம். 24 திகிரி மாறாத பயணம் சகதிமைய பின் சுழற்சிதான், சூரிய சுற்று அல்ல.
அயனம் என்றால்?
அயனம் என்றால் பயணம். அம்சம் என்றால் கோணம். ஒவ்வொரு 72 வருடத்திற்கும் ஒரு திகிரி சூரிய நகர்வால் சித்திரை – 1 ஆரம்பிக்கும் கோணம் மாறுபடும்.
அந்த கோணத்தை திருக்கணிதத்தில் சமநாளில் இருந்து 24 திகிரி கோணம் அதிகமாக்கி சித்திரை – 1 வந்து இருக்கிறது.
ஆனால் வானத்தில் 30 திகிரியாக உள்ளது. அந்த 6 திகிரி நகர்வை சரி பார்த்தால் போதும் . எல்லாம் சரியாகி விடும்.
இந்த அடிப்படையை திறந்த மனதுடன் சரி பார்க்க முன்வர வேண்டும்.
நம் கோயில்களே அதற்கு காத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த பயணங்களின் தொடக்கங்கள் அவர்கள் அறிந்து இருபது தான் அந்த கடகாயணம் , மகராயணம் எல்லாம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments