7/மார்ச்/2023 – இன்று பௌர்ணமி . குச்சி நட்டு சம நாள் நிழலில் இருந்து , குச்சியை பார்த்தால் , இன்று நிலவு , குச்சிக்கு வடக்கில் 7 திகிரியில் உதிக்கும். காலை சூரிய உதயம் குச்சிக்கு தெற்கே 4 திகிரியில் உதிக்கும். இது இந்த வருட , பங்குனி கடைசி பௌர்ணமி. அடுத்த மாத பெளர்ணமியில் சூரியன் குச்சிக்கு வடக்கில் , 4 திகிரியில் உதிக்கும். ஆனால் நிலவு குச்சிக்கு தெற்கே 5 திகிரியில் உதிக்கும் . அது சித்ரா பெளர்ணமி.
இப்படித்தான் ஒவ்வொரு பெளர்ணமி அமாவாசை நாட்களை , ஒவ்வொரு கோயில்களிலும், கருவரையிலிருந்து கொடி மரங்களில் கவனித்து பூசாரிகள் , காலங்களை கணித்து பருவங்களின் கணிதங்களை வகுத்துப் பின்பற்றினார்கள். தவற விட்டதை மீண்டும், உயிர்ப்பிப்போம். நிலாவின் ஓட்டத்தையும், புவியின் ஓட்டத்தையும், சூரியன் சுற்றுவதையும் அறிந்து கொள்வோம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments