சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்

162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில்.
உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில்.
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில்
திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !.

நம்மிடம் கேள்வி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் கூறுகிறார். கருத்தரிக்கும் முன்னரே நம் உடல் உருவாகி உள்ளது எனும் உண்மையை கூறி விட்டு அது இருக்கும் இடம் தேயுவில் , என்கிறார். தேயு என்றால் வெப்பம் எனும் பொருள். ஆண்களின் விறைப் பையில் குறிப்பிட்ட வெப்பத்தில் விதையாக சுணங்கு போல் மூன்று வளையமாக ஒளி உடலுடன் சி எனும் தேயுவில் உயிர்ப்பு இல்லாமல் காயமாக இருக்கும் என்பதை அவர் முன்னரே பாடலில் கூறி இருக்கிறார்.
வெளி – விசும்பு
காற்று- வாயு
வெப்பம் – தேயு
நீர் – அப்பு
நிலம் – பிரித்வி
என்ற ஐந்து பூதங்களுக்கு மாற்றுப் பெயர்களும் உண்டு. விறைப் பையில் விதையாக உயிர் இல்லாமல் இருந்த காயம், ஆண் பெண் இனைதலின் போது , ஆண்களின் விந்து எனும் அப்பு ., விதையை ஊற வைத்து உயிர் பெறுகிறது. ஆக பெண்ணின் சினை முட்டையை அடையும் முனைரே விந்து எனும் நீரால் நம் உடல் உயிர் பெற்று அந்தப் பாதையை நீந்தி கடந்து பெண்களின் கருமுட்டையை அடைகிறது. இப்படி அருள் தரிக்கும் முன்னெலாம் ஆசை இருந்தால் தான் நம் இந்த திரு உடல் உயிர் பெறும். அந்த ஆசை நின்றது வாயுவில் என்கிறார். வாயு தான் ஆசையை உருவாக்குகிறது என்கிறார். இந்த திருவின் கருத்துதான்
சி (நெருப்பு)
வா (காற்று)
ய (வெளி) ம்( நாதம் ) என்கிறார.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *