158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
நெத்தியில், புருவ மத்தியில் , மனமாக உழலுகின்ற நீலமா விளக்கினை அனையாத அதாவது, எண்ணங்கள் நிற்காமல் உதித்து இயங்கும் , மனத்தைத்தான் அப்படி கூறுகிறார். அதை சூரியனுக்கு ஒப்பிட்டால் அதற்கும் மேல் உள்ள ஒளியாகிய (சிவம் ) அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியோ? என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments