157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும்.
கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம்.
பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர்.
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே.
பார்த்தது ஏது பார்த்திடில் என்றால், நம் கண்களால் பார்த்து அதை அடையாளம் கானகூடிய நான் எனும் அதை புருவ மத்தியில் இருந்து அறிந்து கொள்ளும் அதை நான் எனும் நான் பார்த்தால் , பார்வையில் பொருட்கள் படாமல் எந்த புலன் அறிவும், இல்லாமல் ஒடுங்கும். அதே கூத்தாய் அதையே பார்த்துக் கொண்டு இருந்தால், அதுதான் சிவம் (ஆழ் மனம்)எனும் குறிப்பு .
பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பிறழ்ந்து பிறழ்ந்து , சிவம் (ஆழ்மனம்) அறியாமல் இருந்தால் மீண்டும் மீண்டும், பூவும், காயுமாய் பிறப்பு அதில் பொருந்துவீர்கள் என்கிறார். அண்ட மலர்வான சிவமும், பிண்டத்தில் அறியும் சிவமாக ஆழ்மனமாக அனைவரையும் இணைத்து , இருப்பதை புரிந்து அந்த ஆழ்மனதில் லயித்தால் நமக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் தர காத்துக் கொண்டு உள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments