சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?

சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?

156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?.
புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ?
தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ?

அக்கரம் என்றால் , நம் அண்டம் மலர்ந்த போது, நான்கு கரங்களாக , பரந்து விரிந்தது அனாதியோ?. ஆ என்றால் சூரியன். நாம் அனைவரும் சூரியனின் துளிகளான ஆ த்துமாக்கள் தான். இந்த ஆத்துமா அனாதியோ? அண்ட மலர்வில் உருவான பஞ்ச பூதங்களும் , ஐந்து புலன்களும் அனாதியோ?. மனிதர்கள் உருவாக்கிய , தர்க்கங்கள் நிறைந்த நூல்களும், சாத்திரங்களும் அனாதியோ? நம் மேல் மனதிலிருந்து ஊடறுத்து ஆழ் மனதினை அடையும் வழி , காட்டிய சற்குரு அனாதியோ? யார் அனாதி என நம்மிடம் கேட்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *