சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?

சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?

150. பிணங்குகின்றதேதடா? பிரங்ஙை கெட்ட மூடரே?
பிணங்கிலாத பேரொளி , பிராணனை அறிகிலீர்.
பிணங்குமோ? இரு வினை, பிணக்கறுக்க , வல்லீரேல்.
பிணங்கிலாத பெரிய இன்பம், பெற்றிருக்கலாகுமே!

பிணங்கு என்றால் பினைந்து இருத்தல், இணைந்து இருத்தல் என பொருள். பிணக்கு என்றால் , பிரிந்து இருத்தல் என்று பொருள். எது இணைந்து இருக்கும் என அறியாத பிரங்ஙை கெட்ட மூடர்களே!
நல் வினை , தீ வினை இரண்டும் இணையுமா? அந்த பேரொளியான பிராணனை நீங்கள் அறியவில்லை. நல்வினை செய்தால் , இறைவனை அடையலாம் என்பதெல்லாம் பிணக்கறுக்காது. அந்த பிராணனை அறிந்து, ஆழ் மனதினை புரிந்து வினை ஆற்றும் போதுதான், இந்த பிறப்பு எனும் கயிறு அறுபடும். அப்பொழது தான் நான் என்பது போய், பிணங்கிலாத பெரிய இன்பம் நம்முள் குடி கொள்ளும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *