149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல்.
ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும்,
தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும்.
கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே!
நாடி நாடி உம்முளே, நயந்து காண வல்லீரேல் என்றால் உங்களுடைய மேல் மனத்தின் மூலம் ஆழ்மனத்தை அறிந்து கொள்ள முற்படும் போது பிடிபடாது. நான் என்ற மேல் மனதிற்கும், இறைவன் எனும் ஆழ் மனதிற்கும் வேறுபாடு தெரியாமல் ஓடி ஓடி மீளுவார் . கடைசியில் இது தான் ஆழ்மனம் என புரிந்து விடும் . மேல் மனதிற்கும் , ஆழ் மனதிற்கும் வேறுபாடு தெரிந்தால் ஆழ்மனம் நமக்குள் அடங்கி விடும். பின்பு தேடி வந்த காலனும் திகைத்திருந்து , இனி இவன் பிடிபட மாட்டான் என போய் விடும். கோடி காலம் பிறவா வரம் கிடைத்து உம் முகம் இருந்தவாறு தெங்கனே! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments