நம் நடைமுறையில் உள்ள திருத்தப் படாத நாட்காட்டி , 24 + 6 = 30 நாட்கள் பின் தங்கி உள்ளது போல் ஆங்கில நாட்காட்டியும் 6 நாட்கள் பின் தங்கி உள்ளது. 425 ஆண்டுகளுக்கு முன்னாள் அவர்கள் நாட்காட்டியில் 10 நாட்களை கூச்சமில்லாமல் நகர்த்தி விட்டு மறுபடியும் அதை சரி செய்யாமல் விட்டதால் அவர்கள் நாட்காட்டியும் 6 நாட்கள் பருவத்தில் பின் தங்கி உள்ளது. ஆனால் நமது நாட்காட்டி ஒரு மாதம் பருவம் தப்பியதால் நன்றாக மாற்றம் தெரிகிறது. அவர்களது ஆங்கில நாட்காட்டியில் 6 நாட்கள் என்பதால் மாற்றம் தெரியாதது போல் உள்ளது.
Leap வருடத்தில் ஒரு நாள் – நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அதிகமாக்குகிறோம். இது பூமி சூரியனை சுற்றுவதால் உண்டாகும் தேதி மாற்றம்.
அதே போல் சூரியன் சக்தி மையத்தை சுற்றுவதால் , ஒவ்வொரு சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கும , ஒரு தேதியை அதிகமாக்க வேண்டும்.
இந்த சம நாள் கதிர் திருப்ப நாட்கள் 1330 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் குறையும். இது சக்தி மைய பின் சுழற்சியால்.
இப்படி தேதிகளை எங்கே எப்படி எதனால் மாற்ற வேண்டும் என்பதை அறிந்து புரிந்து மாற்ற வேண்டும். அப்பொழுது தான் பருவங்கள் மாறாத , குழப்பம் இல்லாத நாட்காட்டி உருவாகும். அப்படி உருவானது தான் சித்தர் இயல் நாட்காட்டி. அதை சாதாரன பருவ நாட்காட்டி போல் முடக்கி , வைத்துள்ளார்கள். அதனால் தான் பருவங்கள் தவறுகிறது.
இதை நம் பழமையான கோவில்களில் உள்ள கொடிமரங்களும், கருவறைகளும் தக்க வைத்துள்ளது. அதை நாம் புரிந்து கொண்டு , பருவமாற்றம் ஒரு மாதம் முன் சென்றதை அறிந்து சரியான பருவத்தில் வேளாண்மை செய்வோம்.
மகர சங்கராந்தி இந்த Jan-15 அல்ல. தனுசில் சங்கராந்தி Dec-22-ல் முடிந்து விட்டது. மகரத்தில் Jan-21 அன்று தான் சூரியன் நுழைகிறது.
Tags: திருவிழா
No Comments