கடந்த 1800 ஆண்டுகளாக , கலிகாலத்தின் கோரப் பிடியில் இருந்த தமிழகத்தில் , நம் பாட்டன்கள் எவ்வளவு இன்பமாக , இயற்கையை புரிந்து கொண்டு , எளிமையாக வாழ்ந்து , எழுச்சியான வீரத்துடன், இயற்கையான சூழலில், இயற்கையை எப்படி கவனிக்க வேண்டும் எனும் ஆவனங்களை மிகப் பிரம்மாண்டமாக எழுப்பி , நம் தலைமுறைக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். தாராசுரம் கோவில், தஞ்சை பெருஉடையார் கோவில் , கங்கை கொண்ட சோழ புரம் , சிதம்பரம் என என்னற்ற சான்றுகள்.
இந்த பிரமாண்ட ஆவனங்கள் நம் பருவம் மாற்றம் ஒரு மாதம் முன் சென்றதை அறிவிக்கின்றன. இவற்றைப் பயன் படுத்தி நம் பருவங்கள் ஒரு மாதம் முன் சென்றதை அறிந்து கொள்ளலாம். அதே போல் மீனராசி நகர்ந்து முதல் கட்டமாக வந்திருப்பதையும் , அறிவிக்க , நம் பிரம்மாண்டமான ஒவ்வொரு கோவிலின் கொடிக் கம்பங்கள் ஏங்கி நமக்காக காத்துக் கொண்டு உள்ளது.
வரும் சித்திரை – 1 March – 22 என எப்படி அறிவது என்றால் , அன்று அவரவர் அருகில் உள்ள பிரம்மாண்டமான கோவில்களின் கொடி மரங்களை , கருவரையிலிருந்து பாருங்கள் . அன்று சூரியன் கொடிமரத்தின் கீழிருந்து எழுந்து . கொடிக்கம்பத்தின் உச்சியில் வந்து மேலெழுந்து, பின் கோவிலின் எதிர் புரத்தில் இருக்கும். மணடபததின் நடுவில் நின்று மேற்கு புரத்தில் கோபுரத்தின் கலசத்தில் , சூரியன் குத்தி மறைவதை கவனியுங்கள்.
இவைதான் கோவில்கள் கட்டப்பட்டதின் முக்கியமான பயன். அதை இந்த வருடத்திலிருந்து நாமும் புரிந்து கொண்டு, நம் தலைமுறையினருக்குக் கடத்துவோம்.
அதேபோல் சிதம்பரம் கோவிலின் கட்டுமானம், நம் அண்டத்தின் நான்கு கரங்களைக் குறிக்கும் வடிவில், அமைக்கப் பட்டுள்ளது. நடுவில் நடராசன் சன்னதி தான் , பெரு வெடிப்பு நடந்து நம்மையும், நம் அண்டத்தையும் உருவாக்கிய சிவத்தை குறிக்கும் இடம். நான்கு கோபுரங்களும் , சன்னதிக்கு நேராக இல்லை. ஆனால் தெற்கு பார்த்த நடராசனின் படைப்பு , நம் பூமி இருக்கும் சூரிய குடும்பம் தெற்கே அமைந்த கரத்தில் இருப்பதின் சான்று.
இதை அறிவித்த நம் முப்பாட்டன்கள் சிவன் – முருகன் – திருமால் மூவரும் சொன்னதை நம் சோழப் பாட்டன்கள் நமக்கு ஆவணமாக வடித்து விட்டுச் சென்று உள்ளார்கள். அதை பயன்படுத்தி கர்ப்போட்ட காலம் , கேட்டை நல் சித்திரம் என்றும் , சித்திரை – 1 March – 22 எனவும் மாறியதை அறிந்து, மாற்றி முறைப்படுத்தி , நம்மை நாம் அறிந்து , வேளாண்மையை சரியான பருவத்தில் இந்த ஆண்டிலிருந்து செய்வோம் என சிவத்திடம் அனைவரும் வேண்டிக் கொள்வோம்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments