சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்

சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்

146. சாவல் நாலும் , குஞ்சதஞ்சும், தாயதானவாரு போல்,
காவலான கூட்டிலே, கலந்து சண்டை கொள்ளுதே!..
கூவமான கிழ நரி அக் கூட்டிலே புகுந்த பின்,
சாவல் நாலும் குஞ்சதஞ்சும், தானிறந்து போனதே!

சாவல் நாலும் என்றால் மனம் . புத்தி , சித்தம் அகங்காரம் எனும் அந்தக் கரணங்கள் ஆகும். குஞ்சதஞ்சும் என்றால் ஐந்து புலன்கள் , தொடு, சுவை, நாற்றம், கண், காது.. இவை நம் உடலில் கலந்து சண்டை கொள்கிறது என்கிறார். மூப்பு எனும் கிழ நரி நம் உடலில் புகுந்த பின், சாவல், நாலும் குஞ்சதந்தும் (இறந்து) செயலிழந்து , விடுகின்றன என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *