சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்

சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில்

145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல்,
மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள்.
மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை,
ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!

எருமை வளர்ப்பவர்கள் , அது ஈனும் சமையத்தில் கழத்தில் 3 மருந்து பொட்டனங்கள் கட்டி வைப்பார்கள்.,(அதாவது ஒரு பயன்பாடு இருக்கிறது) பிரசவ சமயத்தில் பயன்படும் என்பதற்காக. அது போல் , காலை குளிக்கும் முன் சீலையில் முடிச்சு போட்டு கழத்தில் மாட்டி , பின் அவிழ்க்கிறீர்களே மூடர்களே என்கிறார் அப்படி செய்பவர்களைப் பார்த்து. முடிவிலாத மூர்த்தியை , 3, 4 லோகமும் பரந்த விரிந்த பரமனை ஊனி ஊனி என்ன நினைத்து ? முடிச்சு போடுவதன் உண்மை என்ன உண்மையோ? (கேட்டால் செய்த பாவங்களும், செய்யும் பாவங்களும், செய்யப் போகும் பாவங்களும் அகலும் என சொல்வார்கள்) என அங்கலாய்க்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *