சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த

சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த

144. ஓதி வைத்த நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும்,
மாது மக்கள் சுற்றமும், மறக்க வந்த நித்திரை,
ஏது புக்கொழித்ததோ? எங்கும் ஆகி நின்றதோ?
சோதி புக்கொழித்த மாயம் , சொல்லடா சுவாமியே!

இறைவன் நம்மில் ஆழ்மனமாக, சோதியாக கலந்து உள்ளான். அதை பல ஓதி வைத்த நூல்களில் இருக்கிறது, கற்று உணர்ந்த கல்விகளிலும் இருக்கிறது. நம்மை சுற்றி இருக்கும், மாது மக்கள் சுற்றத்தினால் நமக்கு அது மறந்து , அல்லது மறைக்கப் பட்டு இருக்கிறதா? அல்லது நித்திரையால் மறந்து விட்டதா? எது நமக்கு நம்மில் உள்ள இறைவனை ஒழித்து , எங்கும் ஆகி நின்றவனை நமக்கு காட்டாமல் மறைத்து வைத்திருப்பது. சோதியே புக்கொழித்ததா? எனக்கு புரியவில்லை சொல்லடா சுவாமியே? என ஆச்சரியத்தில் இறைவனை கேட்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *