சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை

சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை

143. உண்ட கல்லை எச்சிலென்று , உள் எரிந்து போடுறீர்.
பண்டும் எச்சில் கையெல்லே, பரமனுக்கும் தேறுமோ!
தண்ட எச்சில் கேளடா ? கலந்த பாணி அப்பிலே !
கொண்ட சுத்தம் ஏதடா? குறிப்பில்லாத மூடரே!

சில நோன்பு, பூசைகளின் போது , சுவை பார்த்துக் கூட சமையல் செய்யாமல் , கடவுளர்க்குப் படைப்போம். சுவை பார்த்தாலே எச்சில் என்று, படைக்க மாட்டார்கள். சாமி கும்பிட்டு முடிக்கும் வரை , சாப்பிட விட மாட்டார்கள், எச்சில் என்று. உண்ட உணவை எச்சில் என்று, மனதுக்குள் எரிந்து, வெளியே போடுறீர். பழங்களை , வியர்வை சிந்த கைகலால் பிசைந்து பரமனுக்கு வைத்தால் , அது அவருக்குத் தேறுமா? என்கிறார். தண்டமான எச்சில் கேளடா ? உன் உடல் உருவானதே, சுக்கிலம் சுரோணிதம் என்ற பாணி அப்பிலேதான். இதில் என்ன சுத்தம் கண்டு விட்டாய் , குறிப்பு இல்லாத மூடரே! என இந்த சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கியவர்களைப் பார்த்து சாடுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *