சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்

சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்

142. உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்,
இதரமாய் இருந்த தொன்று இரண்டு பட்ட தென்னலாம்,
மதரமாக விட்ட தேது மாங்கிசம் புலால் அதென்று,
சதுரமாய் வளர்ந்த தேது சைவரான மூடரே!

இந்த கலிகாலத்தில் தமிழகத்தில் 1800 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்களின் களப்பிரார் ஆட்சிக்குப் பின் தான் , நம்மை, நம் சிறு சிறு பிரச்சினைகளை பெரிதாக்கி, வரலாறுகளை மறைத்து, நம்மிடமே சைவம், வைணவம் என அவர்களே நம்மைப் பிரித்து நமக்குள் பகை வளர்த்திருக்கிறார்கள். சிவன் காலம் 20000 வருடங்களுக்கு முந்தியது. திருமாலின் காலம் 3600 ஆண்டுகளுக்கு முந்தையது. சிவன் சொன்ன வேதியல்களை தரவுகளுடன் நிரூபித்து உலகிற்கு வழிகாட்டியவர் திருமால். ஆனால் அவசரக் குடுக்கைகளே இரண்டாக பிரிந்து சைவர் வைணவர் என்று கூறி சண்டையிட்டுக் கொண்டு நம்மை பிரித்தார்கள். இன்னமும் சிலர் நம்மை சைவர்கள் எனவும் வைணவர்கள் எனவும் நம்பிக்கொண்டு உள்ளார்கள் . அதைத்தான் இப்பாடலில் சைவரான மூடரே என உணர்த்துகிறார். தாயின் உதிரத்திலிருந்து உருவான பாலைக் குடித்து , நீர் வளர்ந்து பெரியவனானதும், இ போன்ற தந்தையின் விரைப்பையில் சுணங்கி இருந்த சுடறொளி தான் கருமுட்டையை அடைந்து ஒன்று இரண்டாக பிரிந்து இரண்டு நான்காகி உன் உடலாக மாமிசமாக, வளர்ந்துள்ளது. அதை புலால் என்று கூறி , சதுரமாக கட்களை அடுக்கி வளர்க்கும் சுடர் ஒளி எது? சைவரான மூடரே என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *