141. புலால் புலால் புலால தென்று பேதமைகள் பேசுறீர்.
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே?
புலாலுமாய் பிதற்றுமாய் பேருளாவும் தானுமாய்,
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் கானும் அத்தனே!.
நம் தமிழ் மரபுகளில் பொதுவான கோயில் விழாக்களிலும் , வீட்டுத் திருமணம் போன்ற நடைமுறைகளில் , புலால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி புலால் உண்பது தவிர்ப்பது என்பது அவரவரது விருப்பம் என்பதையும் நாம் முருகன் காலத்திலிருந்தே கடைபிடித்துக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் ஆரியரது வருகைக்குப் பின்னர் புலால் பற்றி தவறான பரப்புரை செய்யப்படுகிறது. அதைத் தான் சாடுறார். புலால் என்று பேதமைகள் பேசுறீர். புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எப்படி? என கேள்வி கேட்கிறார். புலாலில் உடலைப் பெற்று உம்மைப் போன்ற பிதற்றலும் , உலகில் உளாவிக் கொண்டு உள்ள தானுமாய், அந்த புலாலிலேயே முளைத்து எழுந்த பித்தன் தான் நம் இறைவன் , அதைப் புரிந்து கொள் அத்தனே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments