138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர்.
அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய்,
அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின்.
அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே.
அப்பு என்றால் நீர்மம். அம்மை அப்பன் அப்பு நீ என்றால், தாய், தந்தை உதிரத்தில். வந்தவன் நீ, எல்லோரும் அறிந்ததே – ஆனால் அறிகிலீர்.
அரி – திருமால் – மூன்றாம் தமிழ்ச்சங்கம்- காத்தல். 3600 ஆண்டுகளுக்கு முன்னாள்
அயன் – முருகன்-பிரம்மா – படைத்தல்- இரண்டாம் தமிழ்ச் சங்கம். 12,600 ஆண்டுகளுக்கு முன்னாள்.
அரண் – சிவன்- அழித்தல்- முதல் தமிழ்ச் சங்கம். 26,000 ஆண்டுகளுக்கு முன்னாள்.
இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் பண்பு உள்ள உடலான அம்மை அப்பன் அப்பு நீ , உன்னை ஆதி என உணர்ந்த ஆதியாக நீ ஆன பின், அந்த சிவம் சக்தி இணைந்த அம்மை அப்பன் – நின்னை அன்றி யாருமில்லை ஆனதே!
Tags: சிவவாக்கியம்
No Comments