137. நாலிரண்டு மண்டலத்துள், நாதன் நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூல நாடி கண்டதிங்கு ருத்திரன்.
சேர் இரண்டு கண் கலந்து , திசைகள் எட்டும் மூடியே.
மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே !
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன், நாலிரண்டு மண்டலம்-4 x 2 = 8 மண்டலத்தில் நாதன் நின்றது எவ்விடம் என்கிறார். கால் என்றால் காற்று, உள் செல்லும் காற்று (சோமன்) குளிர்ச்சியாகவும், வெளி செல்லும் காற்று சூடாகவும் (அருக்கன்), கண் என்றால் துளை. இரண்டு காதின் துளை, இரண்டு கண்களின் துளை, மூக்கின் இரண்டு துளை , எல்லாம் சேரும் இடம் , சுவை அறியும் நாக்கு, உதடு தொடு உணர்ச்சி அனைத்தும் அறியும் நான் எனும் , மூல நாடி நெற்றிக் கண், புருவமத்தி, (உருத்திரன் ) அந்த மூன்றாவது கண்ணால் தான் நாம் இந்த உலகை அறிகிறோம். நம் சிரசில் திசைகள் எட்டும் மூடி இருக்க , சூரியனாகிய உயிரும் , சந்திரனாகிய குணமும் , இரண்டும் சேர்ந்த , மனம் (நான்), ஆழ் மனம் (இறைவன்) இரண்டும் சேர்ந்து கலந்து , உடலாக வீசி ஆடி நின்றதே , என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments