136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து,
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம்.
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்.
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!
எட்டு மண்டலம் என்றால்
1. நட்சச்திர மண்டலம்.
2. சூரிய மண்டலம்.
3. சந்திர மண்டலம்.
4. வளிமண்டலம்.
5. காற்று மண்டலம்.
6. வெப்ப மண்டலம்.
7. நீர் மண்டலம்.
8. புவி மண்டலம்.
இப்படி 8 மண்டலங்களில் இரண்டு மண்டலம் வளைத்து என்றால், சூரியன் – உயிர் .
சந்திரன்- உயிரின் பண்பு. இப்படி, உயிரும், உயிரின் பன்பு முமாக விதையாக , ஆணின் விறைப் பைக்குள் இட்ட மண்டலத்திலே, மீதி ஆறு மண்டலங்களும் மூன்று வளையமாக சுணங்கிக் கிடக்கும். தொட்ட மண்டலத்திலே , கண்ணுக்குத் தெரியும் மண்டலம், வெப்பம், நீர், புவி தோன்றி மூன்று மண்டலம். நட்ட மண்டபத்திலே விதையாக இருந்த , உயிரும், உயிரின் பண்பும் , வெப்பத்தாலும், நீரில் ஊறியும் , வேல் வடிவில் உயிர் பெற்று, வளைத்து நெளிந்து, நாதன் ஆடி கருமுட்டையில் தைத்து நின்றதே! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments