கர்ப்போட்ட காலம் குறிப்பு

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் , வாணத்தை கவனிக்க வேண்டும். நான் இந்த 2 வருடங்களாக கவனித்ததிலிருந்து எனக்குப் புரிந்தது , மார்கழியில் வரும் கர்ப்போட்ட காலத்தில் எடுக்கும் தரவுகள் ஐப்பசி யிலிருந்து சித்திரை வரை பொருந்துவது போல் தெரிகிறது. ஏனென்றால் இப்பொழுது வடகிழக்கு பருவக்காற்று வீசிக் கொண்டுள்ளது. இந்த காற்று அடுத்த வருட ஐப்பசியிலிருந்து சித்திரை வைகாசி வரை தொடர்கிறது. ஆகவே அதில்தான் பொருந்தும் போல் உள்ளது. ஆடி 4 விருந்து 18 வரை உள்ள, கர்ப்போட்டம் தென்மேற்கு பருவகாற்று காலம் அப்பொழுது எடுக்கும் தரவுகள் அடுத்த வருட வைகாசியில் தென்மேற்கு பருவகாற்று ஆரம்பித்து புரட்டாசி கடைசி வரை பொருந்துவது போல் தெரிகிறது.


இறைவன் காற்று திசைகளில் குழப்பம் செய்யாமல் , என்ன காற்று வீசுகிறதோ, என்ன மழை பொழிவு இருக்குமோ , அதைத்தான் நேரிடையாக நமக்கு, கர்ப்போட்ட காலத்தில் தெளிவாக புரிய வைப்பார் என எனக்குத் தோன்றுகிறது. ஆகவே எல்லோரும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து , ஆய்வு செய்து அவரவர் பகுதிகளில் இதை அவதானித்து எது உண்மை என தெரிந்து கொள்வோம். இந்த கர்ப்போட்ட காலம் பூராட நல் சித்திரத்தில் இல்லை கேட்டையில் தான் கர்ப்போட்டம் என இதுவரை எடுத்த குறிப்புகளால் புரிந்தது. இனி துல்லியமாக மழைப் பொழிவை , தெரிந்து கொள்வோம்.

சூரியன் 6/12/2022 – லிருந்து 13.33 நாட்களுக்கு 20/12 / 2022 வரை கேட்டை நல்சித்திரத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு சூரியன் ஒரு திகிரி நகர்வதற்குள், சந்திரன் 13.33 திகிரி நகர்ந்து விடும். அப்படியானால் ஒரு நாள் கர்ப்போட்டம் என்பது. 13.33 நாட்களுக்கு உரியது. அதாவது சந்திரன் ஒரு திகிரி நகர்வு ஒரு நாளைக்கு சமம். 24 மணி நேரத்தில் 13.33 திகிரி சந்திரன் நகரும். 1440 நிமிடம் வகுத்தல் 13.33 = 108 நிமிடங்கள் = 6 x 18 = 6 பொழுதுகள். ஒரு பொழுது 4 மணி நேரம் கர்ப்போட்ட காலத்தில் 18 நிமிட நேரம். இந்த மார்கழி கர்ப்போட்ட காலம் 14 நாட்களில் 14 x 13.33 = 186 நாட்களுக்கு உரியது. ஆகவே நாம் ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு என்ன வானத்தில் நடக்கிறது என்பதை குறித்துக் கொண்டால். துள்ளியமாக கனிக்க முடியும், என நினைக்கிறேன். வீட்டில் இருப்பவர்கள், பெரியவர்களிடம் கொடுத்தால் அதை சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன். விவசாயிகள் கண்டிப்பாக இதை குறிப்பெடுத்து எந்த காலத்தில் பொருந்துகிறது என கனிக்க வேண்டும். குறிப்பில் 8 வகையான குறிப்பு இருக்க வேண்டும்.
1. தெளிவான வானம்.
2.வெண்மேகம்.
3. நிற்கும் கருமேகம்.
4. ஓடும் கருமேகம்.
5. சாரல் மழை.
6. தூரல் மழை.
7. நல்ல மழை
8. கனமழை.
என 8 வகையான குறிப்புகள் இருந்தால் போதும்.
காற்றில் வடகிழக்க வீசிக கொண்டு உள்ளது அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் குறித்துக் கொள்ளவும்.

இந்தப் படத்தை புரிந்து கொண்டால் வானம் வசப்படும் என்று கூறியுள்ளேன். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள (360 திகிரியையும்) 24 மணி நேரம் ஆகும். அது போக , பூமியில் இருந்து தான் நாம் அனைத்தையும் பார்க்கிறோம். இரவு 12 மணிக்கு கிழக்கு தொடு வானத்தில் எந்த ராசி தெரிகிறதோ அதுதான் பூமியின் இருப்பிடம். காலை – 6 மணிக்கு , சூரியன் எந்த ராசியில் தெரியும் என்றால்,march – 22 -ல் பூமியின் இருப்பிடத்தில் இருந்து 90 திகிரி விலகவில் காலை சூரியன் மீனராசியில் தெரியும். நாம் தான் சூரியனை சுற்றி வருகிறோம் . சூரியன் இப்பொழுது தென் செலவு முடித்து வடசெலவு ஆரம்பித்து விட்டது. அது விரிச்சிக ராசிக்கும் , தனுசு ராசிக்கும் இடையில் தெரிகிறது. சோதி இருக்கும் இடம் அறிந்தவர்கள் தான் சோதிடர்கள். சூரியன் தான் நம் பூமியை இயக்கி அது எங்கே செல்கிறதோ? அங்கே கூட்டிச் செல்லும். இந்தப் படம் புரிந்தால்தான், சூரியனின் ஓட்டப்பாதையை மார்கழி- 14 – ல் பூமி ஒரு தடவை வெட்டுவதையும், ஆடி – 18 -ல் ஒரு தடவையும் பூமி வெட்டிக் செல்லும். அது தான் கர்ப்போட்ட காலம். சக்தி மையத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது 3 இணை சூரியன்களின், காந்த விசையின் Average அந்த புள்ளியில் சக்தி மையமாக இருக்கும். அது வடக்கு நோக்கிய பயணமாக, Galaxy Centre (சிவத்தை) நோக்கி பயணிக்கும். சூரியன்கள், கிழக்கு மேற்காக அந்த சக்தி மையத்தை மையமாகக் கொண்டு , 24 திகிரி வடக்கு தெற்கான சாய்வு வட்டப்பாதையில் 26,000 வருடங்களுக்கு ஒரு சுற்றாக சக்தி மையத்தை சுற்றி வரும். நம் புவனத்தில் நம் கண்களுக்குத் தெரியும் தனித்தனி விண்மீன் களும், அதனதன் சக்தி மையத்தால் இழக்கப்பட்டு நம்மோடு அதே வேகத்தில் பயணிப்பதால் தான், விண்மீண்கள் நகராதது போல் தெரிவது. ராகு, கேதுவும் நிலா , பூமியின் சுற்றுப்பாதையில் இரு இடங்களில் வெட்டிச் செல்லும். அது போல பூமி சூரிய சுற்றுட் பாதையை மார்கழி- 14-லும் ஆடிப் 18 -லும் வெட்டிச் செல்லும்.

கர்ப்போட்ட காலத்தில், ஒவ்வொரு 108 நிமிடத்திற்கும் ஒரு நாள் கணக்கு. ஒரு நாளின் சிறு பொழுதுகள் 4 மணிநேரம் இருக்கும். அது கர்ப்போட்ட காலத்தில் 18 நிமிடம். கர்ப்போட்ட ஒரு நாள் என்பது 13.33 நாட்களுக்குச் சமம். | கர்ப்போட்ட 14 நாட்கள் 186. நாட்களுக்குச் சமம்.

பூராட நல் சித்திரத்தில் தான் கர்ப்போட்டம் பார்க்க வேண்டும் என சொன்னவர்கள் அட்டவனைப் படிதான் நாம் போன முறை , இந்த இந்த தேதிகளில் வரும் என நினைத்து குறிப்பெடுத்துக் கவனித்ததில் அந்த அட்டவனை தவறு என தெரிந்து விட்டது. பூராட நல்சித்திரமும் தவறு , அட்டவனையும் தவறு என்று புரிந்ததால் , அந்தக் குறிப்பை ஐப்பசி மழையில் பொருத்திப் பார்த்த போது சரியாக வருவது போல் தெரிந்ததால் தான், நான் மார்கழியில் பார்க்கும் கர்ப்போட்டம் ஐப்பசி – 1 – லிருந்து பங்குனி கடைசி வரை இருக்கலாம் என என்னுடைய குறிப்பேட்டை மாற்றி கொடுத்திருக்கிறேன். கவனிக்கவும். ஆடி – 4 – விருந்து ஆடி – 18 வரை எடுக்கும் தரவுகள் சித்திரையிலிருந்து புரட்டாசி – 30 வரை இருக்கலாம். இனி வரும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து மழை காலங்களையும் , வெயில் காலங்களையும் தொடர்ந்து கவனிக்கலாம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *