135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார்.
மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர்.
காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால்.
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!
மாலை காலையாய் சிவந்த மாயமேது செப்பிடீர் என்றால், சூரியன் மாலையில் மறையும் முன் சிவந்தும், காலையில் உதயமாகும் போதும் சிவந்தும் காணப்படும். அது எதனால். பூமியின் விட்டம் 12,756 கி.மீ . ஆரம் 6,378 K.M. நாம் காலை சூரிய உதயத்தின் போது பூமியில் , o _ km -ல் இருக்கிறோம் என வைத்துக் கொண்டால் மதியம் 12 மணிக்கு 6,378 km சூரியனை நோக்கி சென்று , மாலை 6 மணிக்கு மீண்டும் o_ K.M- க்கு வந்து விடுவோம். 12. மணிக்கு வெயில் அதிகாமாக இருக்கும். சூரியன் மஞ்சளாக இருக்கும். எப்பொழுத O_ km – ல் இருக்கிறோமோ? அப்பொழதெல்லாம் சூரியன் சிவந்து காணப்படும். இரவு மேலும் 6,378 km சூரியனை விட்டு விலகிச் செல்வதால் , இருட்டாக இருந்தாலும் , குளிராக இருக்கும். மீண்டும் காலையில் 6 மணிக்கு o – K.M – ல் சூரியன் சிவக்கும். இப்படி காலத்தை அளப்பதற்கு காலை மாலை என , காலன் நம்மிலே கலந்து நிற்கிறார். பிறந்ததிலிருந்து காலம் கனக்கிடப்படுகிறது, இறப்பை நோக்கி. ஆனால் இந்த காலை மாலை அற்று கருத்திலே (o – K.M) ஒடுங்கினால் , என்றால் , அனைவருக்கும் கருத்துக்கள் உதிக்கும் இடத்திலேயே ஆழ்ந்து , ஐம்புலன்களை அறியாமல் , ஆழ்மனதினுள் அமிழ்ந்தால், காலை மாலை என்ற காலன் இல்லை இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments