131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது.
தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற !
ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது.
தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!.
திருமணம் ஆகும். வரை மாதம் மாதம் தூமைதான், திருமணமான ஆண் பெண் இனைதலினால் , ஆணிடம் இருந்த சுதீபம் , பெண்ணின் கருமுட்டையை தைத்து நின்றதால் தூமை நின்றது என்கிறார். சுதீபம் என்றால் காற்று, வெளி, வெப்பம் மூன்றும் இணைந்து உருவான கலவை தான் , சுதீபம் என்பது. சு என்றால் மிகச்சிறிய என்று பொருள். தீபம் எறிய oxygen எனும் காற்று வேண்டும். எண்ணெய் , திரி இதெல்லாம் தான், காற்று, வெளி, வெப்பம்.
எவ்வித சஞ்சலங்கள், தன்மை, கூச்சம் அற்று , ஆண்மையினால் உருவான வேல் வடிவிலான சுதீபத்தால் , வழக்கமான கருமுட்டை உருவாதல் நின்றது , கருவறையில் குழந்தை உருவாகி , எதைப் பற்றியும் கவலைப்படாமல், குழந்தை, தாயின் சத்துக்களை எடுத்து சொற்கள் அற்று வளர்ந்து கொண்டு இருக்கும்.
Tags: சிவவாக்கியம்
No Comments