130. மாதம் மாதம் தூமைதான், மறந்து போன தூமைதான்,
மாத மற்று நின்றலோ? வளர்ந்து ரூபமானது.
நாதம் ஏது?, வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா?
வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா?
கருவாகாத, கருமுட்டையைத் தான் தூமை (தீட்டு) என்பார்கள். மாதம் மாதம் கருமுட்டை விளைவு உண்டாகாவிட்டால், அது வெளியேறி புது முட்டை தயாராகும். அந்த மாதம் மறந்து மாத மற்று நின்று 10 மாதம் , குழந்தையாக ரூபமாகி வளர்ந்து நற்குலங்களாக வெளிவரும் அதைத்தான் நாதம் ஏது? வேதம் ஏது? நற்குவங்கள் ஏதடா? அதை தீட்டு எனும் வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா? என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments