129. சத்தம் வந்த வெளியிலே, சலம் இருந்து வந்ததும்,
சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே!
சுத்தமேது?, கெட்ட தேது?, தூய்மை கண்டு நின்ற தேது ?
பித்த காயம் உற்ற தேது? பேதம் ஏது? போதமே!
வானில் இடி இடித்து மழை பெய்வதைத் தான், சத்தம் வந்த வெளியிலே , சலம் இருந்து வந்ததும் என்கிறார். இறைவனை அடைய தினமும் குளித்து பூஜை சடங்குகள் என செய்வதற்கு சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே என்கிறார் . சுத்தம் என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன? நீ தூய்மையாக இருப்பதை கண்டு நின்றது எது?.. பித்தம் – என்றால் சூடு (வெப்பம்) எப்படி உடல் எடுத்தது? அந்த பித்தம் காயம் ஆனதில் பேதங்கள் (வேற்றுமைகள்) ஏது ? இந்த உலகில் அனுபவிக்கும் போதமே? தெரியுமா? மூடனே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments