சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர்.
முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர்.
துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்.
முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ?

பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் வேறு கருமுட்டை தயாராகும். வெளியேறும் நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதை விடுத்து அதை தீட்டு என தனிமை படுத்துவது . குழந்தை பிறந்த பொழுது அதையும் தீட்டு எனவும், மனிதன் இறந்த பொழுது அன்றைய நாளையும் தீட்டு என கூறி அதையும் வியாபாரமாக்கி அதில் காசு பார்க்கும் முறையிலாத நீசரோடு பொருந்துமாறு எங்களே? என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *