127. எங்கள் தேவர், உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றல்லோ?
அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில்,
பங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? காற்று, வெளி, வெப்பம் இதைத் தான் தேவர்கள் என்றால் எனக்கு வேறு காற்று வெப்பம் வெளியா? உனக்கு வேறா? எல்லாம் ஒன்று தான். கடவுளர்கள் என்றால் வெவ்வேறு கால கட்டங்களில் அதை அறிந்து நமக்கு எடுத்துரைத்தவர்கள். அவர்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு ஆட்கள். ஆனால் வெளி, காற்று, வெப்பம் எனபதெல்லாம் எல்லார்க்கும் பொது. அதை சிலர் கைப்பற்றி pattern writes வாங்கி நம்மிடம் விற்றுக் கொண்டு உள்ளார்கள். நம் அண்ட வெடிப்பின் மத்தியில் உள்ள சிவம் தான் ஆதி மூர்த்தி, அங்கும் . என்பது.
இங்கும் என்றால் நம் உடலில் ஆணின் விறைப் பையில் மூன்று வளையமாய் சுருண்டு கிடந்த ஆதி மூர்த்தி வெடித்துக் கிளம்பி கருமுட்டையில் தைத்து உடலாக உள்ளதும் அச் சிவம் தான். அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில், இதை வேறு வேறாக சொன்ன பேர்கள் வாய் புழத்து மாழ்வரே என்கிறார். அனைவருக்கும் ஆதி மூர்த்தி ஒருவர்தான் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments