126 . காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள், காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்.
காலமே எழுந்திருந்து, கண்கள் மூன்றில் ஒன்றினால்,
மூலமே நினைந்தீராகில் மொத்த சித்தி ஆகுமே!.
காலை மாலை தினமும் குளித்து பூசை செய்தால் தான் இறைவனின் பாதம் அடைய முடியும் என்பவர்களைப் பார்த்து காலை மாலை நீரிலே மூழ்கும் அந்த மூடர்காள் என்கிறார். தேறை நீரிலே இருக்கிறது அப்பொழுது அதுதான் முதலில் இறைவனை அடைய முடியும். காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும். என்கிறார். ஆனால் இறைவன் என்கிற ஆழ்மனதை அறிய காலமே எழுந்து அமர்ந்து இரு கண்களையும், மூன்றாவது கண் ஆகிய புருவமத்தியில் ஒன்றினால், மூலநாடியில் (உச்சியில்) நினைந்து இருந்தீர்கள் எனில் இந்த பரந்த பேரண்டத்தின் மொத்த அறிவும் ஆழ் மனதினால் கிடைக்கும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments