125. வேதம் நாலு பூதமாய், விரவும் அங்கி நீரதாய்,
பாதமேயிலிங்கமாய், பரிந்து பூசை பண்ணினால்,
காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள்.
ஆதி அந்தமும் கடந்த அரிய வீடதாகுமே…
வேதம் நாலு பூதமாய் என்றால் வெளி, காற்று, வெப்பம், நிலம் ஆகிய நான்கு பூதங்களின் இயல்பிலிருந்து அறிந்தது தான் நான்கு வேதங்கள் என்கிறார். வெப்பத்தினால் உருக்கிப் பிரித்து அறியும் அறிவியல் உருக்கு வேதமாகவும். காற்றை அதிர வைத்து உருவாகும் இசை இயல்தான் அதிர்வன வேதம். வெளி எனும், விண்ணியல் அறிவு, மருத்துவ அறிவு, வேதியல் என யசூரண வேதம் , பின் நிலத்தினால் உருவாகும் அரசியல் சாம வேதமாகவும் அளித்தவர் சிவன். பெரு வெடிப்பில் முதலில் நீர் இருக்காது. அனைத்துப் பொருட்களும் வெளிக் கிளம்பி , வெப்பம் குறைந்த பொழுதுதான் காற்று நீராக மாறி அதனால் அனைத்து கோள்களும் பிசைந்து உருண்டு திரண்டு உலகங்களாக மாறும். அதைத்தான் விரவும் நீரதாய் என்கிறார். நீரால் உருண்டு திரண்டு பாதம் வைக்கக் கூடிய உலகமாய் உருவாகியதைத்தான் பாதமே லிங்கமாய் என்கிறார். நம் உடல் உருவாவதைப் போல் தான் உலகமும் உருவாகி உள்ளது. இதையெல்லாம் பரிந்து பூசை பண்ணினால். நமக்குள் இருக்கும் இறைவன், வேறு புலன்களை விட காதில் நம்மோடு பேசி உறவாடுவது தான் அதிகம். அதில் அவர்கள் கடை திறந்து கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்று கட்டறுத்த ஞானிகள் , இறைவன் என்பவன் இந்த ஆதி அந்தம் உள்ள ஐம்பூதங்கள், பெருவெடிப்பு, என அதற்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் எனும் ஆதி அந்தமும் கடந்த அறிய வீடு அதாகுமே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments