சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

124. சாவதான தத்துவம், சடங்கு செய்யும் ஊமைகாள்.
தேவர் கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்?.
மூவராலும் அறியொனாத முக்கண்ணன் முதல் கொழுந்து,
காவலாக உம்முள்ளே கலந்து இருப்பன் காணுமே !

மனிதர்கள் இறந்து விட்டால் , சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு என்று தத்துவம் , அந்த சடங்குகளின் வரிசை மாறினாலே கோபப்படும் மனிதர்கள். அவர்களைப் பார்த்து ஊமைகாள் என்கிறார். தேவர்களை கல்லாக வழிபடுகிறோமே! அதைப் பார்த்து சிரிப்பதன்றி வேறு என் செய்வேன் என்கிறார். மூன்று தேவர்களான வெளி, காற்று வெப்பம் அவர்களாலே அறிய முடியாத , பரந்த அறிவைக் கொண்ட முக்கண்ணன், முதல் கொழுந்தாக உனக்குள் காவலாக இறைவனே இருப்பதை அறியாமல் , குழந்தைகளுக்கு புரிய வைப்பதற்காக உருவாக்கிய , சில செய்கைகளையே கடைசி வரை புரியாமலே செய்து கொண்டு இருக்கிறீர்களே ஊமைகாள் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *