123. பருத்தி நூல் முறுக்கி இட்டு, பஞ்சி ஓதும் மாந்தரே?
துருத்தி நூல் முறுக்கி இட்டு துன்பம் நீங்க வில்வீரேல்!.
கருத்தி நூல் கலைபடும், கால நூல் கழிந்திடும்,
திருத்தி நூல் காவரும் சிவாய அஞ்செழுத்துமே!
பருத்தி நூல்களை திரித்து பந்தம் கட்டி அந்த வெளிச்சத்தில் ஓதும் மாந்தரே ! அந்த வீண் வேலையை விட்டு மூச்சை துருத்தி, காற்றை முரிக்கி, சூரிய கலை சந்திரகலை என ஐம் புலன்களை , தவிர்த்து உங்கள் துன்பம் நீங்க செய்ய முற்படவில்லையென்றால், உண்மையான கருத்துக்கள் , கலைந்து பொய்கள் நிறைந்து, அதில் இருந்து விடுபட காலங்கள் நீளும். திராவிடர்கள் போல் அறியாமையால் அவசர குடுக்கைகளுக்கு அடிமையாகவே காலங்கள் கழிந்துவிடும். உண்மைகளை அறிய முடியாது. அவர்களுக்கு சேவகம் செய்யத் தலைப்பட்டு, அதிலிருந்து மீள முடியாத , பாவங்களில் மாட்டிக் கொண்டதைத்தான் அப்படிக் கூறுகிறார். அதைத் திருத்தி பரந்த உண்மைகளை அறிய காவு அருத்து என்றால் பழைய பாவங்களை கட்டருக்க, சிவாய அஞ்செழுத்தின் ஆழமான அர்த்தங்களை அறிந்து புரிந்து ஓத வேண்டும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments