122. ஏக போகமாகியே, இருவரும் ஒருவராய்,
போகமும் புனர்ச்சியும், பொருந்துமாற தெங்கனே!
ஆகலும், அழிதலும், அதன் கனேயதானபின்,
சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லையே!
ஏக போகமாகியே இருவரும் , என்றால் இறைவன் என் உள்ளே புகுந்த பின், அவன் தாழ் பற்றி – விடாமல் அவனுடன் இணைந்த பொழுது, பேரின்பமான போகமும் புனர்ச்சியும் அடைந்தபொழுது, அவனுடன் அப்படியே பொருந்தி இருப்பது எப்படி ?எனும் சிந்தனைதான். இறைவனின் ஐந்து தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளள், ஆகியவை. இயற்கையின் ரகசியங்கள் அனைத்தையும், நமக்கு வெளிக்காட்டாமல் மறைத்து வைத்துள்ளான். அதை யார் அடைய நினைக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் அருளுவான். எல்லோருக்கும் எல்லா ரகசியங்களும் தெரிய வேண்டியதில்லை. அப்படி அவன் என்னுடன் இணைந்ததால் ஆக்கலும், அழித்தலும் அவனுடைய வேலை என்பதால் , அவனே என்னுள் இருப்பதால் எனக்கு இனி சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments