121. இருக்கலாம் இருக்கலாம், அவனிலே இருக்கலாம்.
அரிக்குமால் பிரம்மனுடன், அகண்டம் ஏழ் அகற்றலாம்,
கருக்கொழாத குழியிலே, கால் இல்லாத கண்ணிலே,
திருப்பறை திறந்த பின்பு , நீயும் நானும் ஈசனே.|
கால் என்றால் காற்று. காற்று இருக்கும் இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் தான் கண்களுக்கு வேலை. ஆனால் கனவில் காட்சிகள் காணும்போது கண்கள் திறந்து இருப்பதில்லை, காற்றுக்கு வேலை இல்லை. அப்படி நம்முடைய ஆழ்மனதிற்குள் பிரவேசிக்கும் போது நமக்கு காட்சிகள் சில விநாடிகள் தோன்றி இருக்கும். மூளை நம் மேல் மனதான எண்ணங்களை உருவாக்குவது. ஆனால் ஆழ்மனம் என்பது, பரந்த வெளியில் உள்ள அந்தனை தகவல்களையும் கொண்டது. அது CPeneal gland ) ஆனந்த சுரப்பி வழியாக மூளையை அடையும். கருத்துக்கள் எழாத குழியிலே என்றால் நம் உச்சியில் மூளைக்கும் (Peneal gland) ஆனந்த சுரப்பிக்கும் இடையே ஒரு வெளி உண்டு. அங்குதான் ஆழ்மனது இயங்கும் இடம். அவ்வப்பொழுது சிக்கல்கள் வரும் பொழுது நாம் ஆழ்மனதுக்கு சென்று திரும்பி இருப்போம். அந்த கனங்களில் உச்சியில் உள்ள பறை திறந்து மூடி இருக்கும். அந்த திருப்பறையை திறந்து அவன் கூடவே இருக்கலாம் இருக்கலாம் என்கிறார். அதே போல் மூன்று தமிழ்ச் சங்கத்தினை வழி நடத்திய, சிவன் (அரி), முருகன் (பிரம்மா) திருமால் (மால்) மூவரின் துணையோடு நம் மாயையாக பார்க்கும் இந்த பரந்த உலகமும் , உயிர்களைப் பற்றிய உண்மையான அறிவையும், 7 மாய திரைகளை அகற்றி பெறலாம் என்கிறார். அந்த திருப்பறையை திறந்தால் நீயும் நானும் ஈசனே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments