117. விண்ணில் உள்ள தேவர்கள் அறியொனாத மெய்ப்பொருள்.
கண்ணில் ஆணி ஆகவே கலந்து நின்ற எம்பிரான்.
மண்ணிலாம் பிறப்பறுத்து, மலரடிகள் வைத்த பின்,
அன்னலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே !
விண்ணில் உள்ள தேவர்கள், என்றால் வெளி, காற்று , வெப்பம் மூன்றும் தான். அவர்களைத்தான் ஆதியான தேவர்கள் என்பார்கள். அவர்களை அறிந்தது போல் இல்லை அந்த மெய்ப்பொருள். அப்படி என்றால் நீர், நிலம் போல் இருக்குமா? என்றால் அந்த ஆதியிலிருந்து தோன்றியது தான் இந்த நீரும், நிலமும். ஆகவே அது இல்லையென்றால் இதுவும் இல்லை. ஆனால் கண்ணில் ஆணியாகவே கலந்து நிற்கிறான் அவன். இந்த உலகில் , எல்லாவற்றையும் அனுபவித்து, உணர்ந்து, அறிந்து இனி பிறப்பு வேண்டாம் என பிறப்பறுத்து , இறைவனை நோக்கி மலரடிகள் எடுத்து வைத்த பின், அந்த அன்னல் என்னை விட்டு நீங்காமல், என் உள்ளேயே அமர்ந்து வாழ்ந்து கொண்டு உள்ளான் என்பது உண்மையே ! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments