சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?

சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?

116. நெட்டெழுத்து வட்டமோ? நிறைந்த பல்லி யோனியும்.
நெட்டெழத்தில் வட்டம் ஒன்று, நின்றதொன்று கண்டிலேன்.
குட்டெழத்தில் உற்றதென்று , கொம்பு கால் குறித்திடில்,
நெட்டெழத்தின் வட்டம் ஒன்றில் நேர் படான் நம் ஈசனே.

உலகில் நான்கு வகையில் உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. உப்புசத்தில் பிறக்கும் உயிர்கள், விதையில் முளைக்கும் உயிர்கள், முட்டையில் பொறிக்கும் உயிர்கள், குட்டியாக பிறக்கும் உயிர்கள். இதை நான்கு வகையான யோனி பேதங்கள் என சொல்வர். அவை தான் பெருவெடிப்பில் உருவான நான்கு கரங்கள். அப்படி பல்லி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சார்ந்தது . அந்த முட்டை அண்டத்தின் பெரு வெடிப்பை குறித்த, வட்டம். அந்த வட்டத்தில் இருந்து தான் நம் “அ “ எனும் எழுத்து துவங்குகிறது. அப்படி நெட்டெழுத்து எல்லா வற்றிலும் இந்த வட்டம் இருக்கும். அதே போல் அ முதல் ஒள ஃ என எல்லா எழுத்துக்களிலும் வட்டம் இருக்கும். மெய் எழுத்துக்களிலும் வட்டம் இருக்கும். ஏனெனில் மெய் எழுத்து எல்லாம் இ ஒலியுடன் சேர்ந்து தான் ஒழிக்கும். இக், இச், இட். ….. என. ஆகவே அதிலும் வட்டம் இருக்கிறது. குட்டெழத்து உயிர் மெய் எழுத்துக்களிலும் கொம்பு, கால் குறித்த அனைத்து எழுத்துக்களும் உயிர் எழுத்து சேர்ந்து இருப்பதால் அவற்றிலும் அந்த பெருவெடிப்பான வட்டம் இருக்கும். ஆனால் எல்லா நெட்டெழத்திலும் அந்த வட்டம் நிற்காமல் சென்று கொண்டு இருப்பதாக , தொடர்ச்சியான வளைவு கோடு இருக்கும். நெட்டெழுத்தில் வட்டம் ஒன்று நின்ற தொன்று கண்டிலேன் என்கிறார். ஆனால் “ ஈ “ எனும் நெட்டெழுத்தில் உள்ள வட்டம் இரண்டும் நிற்கின்றன. அவை இரண்டும் பூமியும், சந்திரனும் தான்.இப்படி சூரியன் உருவாகி நிலையான வடிவம் பெற்ற பிறகு தான் நம் பூமியில் உயிர்கள் உற்பத்தி ஆகும். நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர் படான் நம் ஈசனே என்கிறார். ஈசன் என்றால் நம் சூரியன் தான். அவன் தான் நம் உடல் வளர சக்தி கொடுப்பவன். இப்படி 1100 வருடங்களுக்கு முன்னரே வட்டம் கொண்ட அனைத்து 247 எழுத்துக்களும், கொம்பு கால், நெடில், குறில் என பாட்டில் குறிப்பிடுகிறார். ஆனால் இங்கு சில அறிஞர்கள் தமிழ் எழுத்துக்களின் இன்றைய வடிவங்கள் போன நூற்றான்டின் இறுதியில் வந்ததாக கண்டு பிடித்து மகிழ்கிறார்கள். பாவம். நெட்டெழுத்துக்கள் மொத்தம் 133. கவனிக்கவும். இதற்கும், திருக்குறள் அதிகாரத்திற்கும், அண்டத்தில் உள்ள ஆண்டு கணக்குக்கும் தொடர்பு உள்ளது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *