115. உயிர் நன்மையால், உடல் எடுத்து வந்து இருந்திடும்.
உயிர் உடம்பு ஒழிந்த போது, ரூபம் ரூபம் ஆயிடும்.
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி, ஒன்றை ஒன்றை கொன்றிடும்.
உயிரும் சக்தி மாய்கை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே !
நாம் இருக்கும் பொழுது, செய்த நல்வினை, தீவினைக்கு ஏற்ப, நன்மையால் உயிர் தான் உடல் எடுக்கிறது. உயிர் உடல் எடுத்து வந்து உலகில் இருந்திடும். என்கிறார். இந்த உடல் தான் சிவம் என்பது. அது அழியும் பொழுது உயிர் வேறு உடல் வடிவம் அடைந்து ரூபம் ஆகிவிடும் என்கிறார். உயிர் உடல் எடுத்து வளர்ந்து , அந்த உடலை முதுமை எனும் மாய்கையாகி உயிரும் சிவமும் ஒன்றை ஒன்றை கொன்று கொள்ளும் என்கிறார். நம் உடல் இயங்க , வேண்டிய சக்தியை கூட மாய்கையாக்கி, இயங்க விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக, உயிர் சக்தியையும் கொன்று தின்னும் என்கிறார். நோயே இல்லாமலேயே உடல் முதுமையால் இறப்பதற்கு காரணம், உயிர் , உடல் , சக்தி இம் மூன்றும் ஒன்றுக்கொன்று மாய்கை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments