உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்தில் உச்சம் சந்திரன் , நீசம் ராகு, கேது. மூன்றாம் கட்டம், பூமியில் சூரியன் கதிர் திரும்பும் 23.5 திகிரியாக இருப்பதால் அதில் உச்சம் நீசம் கிடையாது அதேபோல் 9 ஆம் வீட்டிலும் கதிர் திரும்புவதால் உச்சம் நீசம் கிடையாது.
அந்தந்த ராசிக்கு ஆட்சி வீடு எப்பொழுதும் மாறாது. அது புத்தி . அவர்களாக பகைவர், நட்பு, சமம் உருவாக்கி கொள்வதால், அந்தந்த ராசிகளுக்கு உரியது. ஆகவே சூரியன் நகர்வால் நகரும் ராசிகளின் , நட்பு, பகை, சமம் ராசிகளுடன் நகரும். ராசிகள் நகர்ந்தாலும் உச்சம் நீசம் அந்தந்த கட்டங்களிலேயே இருக்கும். ஆனால் நட்பு பகை சமம். மேசத்துடன் நகர்ந்து இரண்டாம் கட்டத்திற்கு சென்று விடும்.
புத்திக்கு (இறைவன்) நிலா சுற்று, உடல் ஆரோக்கியத்துக்கு(சக்தி) பூமி சுற்று (அம்மா), உயிர் ஆற்றலுக்கு (சிவம்) சூரியன் (அப்பா). அழகுக்கு அம்மா. ஆற்றலுக்கு அப்பா. புத்திக்கு இறைவன். அதனால் தான் புத்தியை திசை திருப்ப பரிகாரம் இறைவனை கும்பிடுதல். இறைவன் நம் உள்ளே தான் புத்தியால் இனைந்துள்ளான். பரிகாரம் நம் உள்ளே உள்ள இறைவனை தலை தாழ்த்தி வணங்கிவது தான். அடுத்த முறை அந்த தவறை செய்யக் கூடாது, செய்ய மாட்டோம். அப்படி செய்தால் அதன் வினைகளை அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.
கோளில் பொறியில் குணம் இலவே!
எண் குணத்தான் தாலை வணங்காத்தலை.
என்ற குறளும் இதைத்தான் கூறுகிறது. எண் குணத்தான் என்பது எண்களில் இயங்கும் இறைவன் என்றுதான் பொருள். எட்டு வரை தான் எண்கள். 6 திருப்பி போட்டால் 9. எட்டுவகையான ஓம் நமசிவாய தான். எட்டு வகையான சக்திகள் தான் குணங்கள். ஒலிக்கு என்று ஒரு குணம். ஒளிக்கு வேறு வகையான குணம், வெப்பம் வேறு வகையான குணம். இப்படி ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு குணங்களைக் கொன்டவன். அந்த புத்தியாக நம்முள் இருக்கும் இறைவனின் காலடியை பற்றிக் கொண்டால் , தவறுகள் இழைக்க மாட்டோம். கோள்களுக்கும், கருவிகளுக்கும் (பொறி) குணம் இருக்காது என்கிறார் திருவள்ளுவர்.
Tags: திருக்குறள்
No Comments