சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

111. வீடு எடுத்து வேள்வி செய்து, மெய்யரோடு பொய்யுமாய்.
மாடு மக்கள் , பெண்டிர் , சுற்றம் , என்றிருக்கும் மாந்தர்காள்.
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து, அழைத்த போது.
ஆடு பெற்றது அவ் விலை , பெறாது காணும் இவ்வுடல்.

வீடு கட்டி , கணபதி ஹோமம், புன்னியார்ச்சனை என வேள்வி செய்து, மாடு, மனைவி, குழந்தைகள், சுற்றத்தார்கள் என பெருமையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மாந்தர்களே! , அந்த நாடு பெற்ற நண்பன், ஓலை கொண்டு வந்து நம் ஆவியை கேட்கும் பொழுது, நாம் வளர்த்த ஆட்டின் விலையை கூட பெறாது காணும் இந்த உடல். என்கிறார். இதையெல்லாம், நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள், முருகன் காட்டிய அறத்தின் வழியில் , கலிகாலத்திலும் (அவசரக் குடுக்கைகளின் ஆட்சியிலும்) எளிமையாக வாழ்ந்து கொண்டு, நமக்கும் அந்த வாழ்வியலைக் கொடுத்ததால், எளிமையாக பிறவிக் கடலைக் கடந்து கொண்டுள்ளோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *