110.நாவில் நூல் அழிந்ததும், நலம் குலம் அழிந்ததும்,
மேவு தேர் அழிந்ததும், விசாரம் குறைந்ததும்,
பாவிகாள், இதென்ன மாயம் ? வாம நாடு பூசலாய் ,
ஆவியார் அடங்கு நாளில், ஐவரும் அடங்குவார்!.
நம் ஆவி அடங்கினால் , நம் நாவில் வரும் வாரத்தைகள், பேச்சு அடங்கி விடுவதைதான் நாவில் நூல் அழிந்து விடும் என்கிறார். நம். உடலின், நலம், குலம் அழிந்துவிடும். நம் உடல் ஆகிய தேர் அங்கே இங்கே மேவிக் கொண்டு இருப்பதும் அழிந்து விடும் என்கிறார். ஆனால விசாரம் அழிந்து விடும் என கூறவில்லை. விசாரம் என்றால் சிந்தனை. அது குறைந்து கொண்டு வரும் என்கிறார். பாவிகாள் இதென்ன மாயம் என ஆச்சரியப் படுகிறார். அதென்ன ? வாமநாடு பூசலாய். வா – காற்று ம – நீர் ந-உடல்.ஆ- உ – உயிர் ஒன்றுக் கொன்று ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் பூசல் நடக்கிறது என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறார். ஆவி அடங்குவது என்றால் சூடு இல்லை என்பது தான். உடல் சூடாக , 37 திகிரியில் நடமாடி கொண்டு இருக்கும். அந்த சூடு இல்லை என்றால் விழுந்து விடும். ஆவி அடங்கிய நாளில் ஐம்புலன்களும் அடங்கி விடும்.
Tags: சிவவாக்கியம்
No Comments