109.மண் கிடாரமே சுமந்து, மலையில் ஏறி மறுகுறீர்,
எண் படாத காரியங்கள் இயலும் என்று கூறுவீர்.
தம்பிரானை, நாள்கள் தோறும், தரையிலே தலை பட.
கும்பிடாத மாந்தரோடு, கூடி வாழ்வது எங்கனே?
அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக சுட்ட மண்ணால் செய்த பொருட்களை , சுமந்து மலைகளின் மேல் ஏறி, அவன் அருளுக்காக ஏங்கி மறுகுகிறீர்கள். எண்கள் தான் இறைவன் என்னுமளவிற்கு எண்களாகத்தான் இந்த உலகம் இயங்கிக கொண்டு உள்ளது. உயிர் உற்பத்தி கூட எண்களால் தான். 108, 111, 36, 37, 32,96 369, 786 , 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 , 1.6 (Golden ratio) இப்படி பல முக்கியமான எண்கள் தான் உலகை இயக்கிக கொண்டு உள்ளது. ஆனால் எண்கள் இல்லாத காரியங்கள் இயலும் என கூறுகிறீர். (திராவிடர்களைத்தான் ) இப்படிப்பட்ட தம்பிரானை, தினமும் தலை தரையில் பட கும்பிடாதவர்களுடன், எப்படி கூடி வாழ முடியும் என்கிறார். இப்படி எண்களின் முக்கியத்துவம் உணர்ந்து , எண்களை உருவாக்கி, அதன் அர்த்தம் புரிந்து அதை உணர்ந்த நம முன்னோர்கள், எண் என்ப ஏனை எழுத்தென்ப , கண் என்ப வாழும் உயிரக்கு என வாழ்வாங்கு வாழ்த்தவர்கள். ஆனால் அந்த எண்களை தாங்கள் தான உருவாக்கினோம் என, பெருமை பட்டுக கொள்பவர்களையும், நமக்கு எண்கள் தெரியாது என நம்மவர்களே நினைப்பதும் , என்னவென்று சொல்வது ?
Tags: சிவவாக்கியம்
No Comments