சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்

சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்

108. பாரடங்க உள்ளதும், பரந்த வானம் உள்ளதும்,
ஓரிடமும் இன்றியே, ஒன்றி நின்ற உன் சுடர்,
ஆரிடமும் அன்றியே , அகத்துள்ளும், புறத்துள்ளும்,
சீரிடங்கள் கண்டவர் , சிவன் தெரிந்த ஞானியே!

நம்முடைய அண்டம் அடங்கித்தான் உள்ளது, விரிந்து கொண்டு இல்லை . இதை நம் முன்னோர்கள் நம் முதல் எழுத்தான அ எனும் வடிவத்திலேயே வடித்துள்ளனர். அந்த அ வில் உள்ள சுழி மெதுவாக கீழிறங்கி , வளைந்து மேலெழுந்து , நம் அண்டத்தின் பெரு வெடிப்பை குறித்தது தான் அந்த சுழி. அந்த பெரு வெடிப்பில் , உருவான ஒரு கரத்தில் தான் நம் சூரிய குடும்பம் உள்ளது என்பதை குறிப்பது தான் அ எனும் எழத்தின் வடிவம். எப்பொழுது காந்தபுலம் , நம் பூமிக்கு உள்ளது என அறிந்தோமோ, அப்பொழுது , வெடித்துக் கிளம்பிய துகள்கள், ஒன்று திரண்டு, பூமி, சூரியன்கள், என உருவாகி, காந்த புலம் உருவாகிய உடன் மீண்டும் கிளம்பிய இடத்திற்கே திரும்ப ஆரம்பிக்கும். ஏனெனில் பெரு வெடிப்பு நிகழ்ந்த இடம் தென் துருவம் கொண்ட காந்தப் புலம். நம் வட காந்த புலம் , தென் புலத்தை நோக்கி ஈர்ப்பதால் அண்டம் சுருங்கிக் கொண்டு உள்ளது என்பது தான் அ வின் சிறப்பு. நம் 12 உயிர் எழுத்துக்களும், Periodic table – தான். பரந்த வானம் உள்ளதும். அந்த பெருவெடிப்பு நடந்த இடம் தான் நம் அண்டத்தின் (Galaxy) மையம் . அது தான் சிவம். அங்கு கிளம்பிய அந்த சுடர் , ஓரிடமும் இன்றி எங்கும் பரந்து , அண்டத்தின் அனைத்து இடங்களிலும் ஒன்றி உள்ளது என்கிறார். அதே போல், உயிர் இனங்களில், ஏதோ ஒர் உயிரினத்தில் மட்டும் இறைவன் குடி கொண்டு இல்லாமல், அனைத்து உயிரினங்களின் உள்ளேயும், புறத்திலும், அனைத்தையும், இணைத்துக் கொண்டு சீராக இயங்கிக் கொண்டு உள்ளான். இதில் நம் உள்ளே அவன் இருக்கும் சீராக இயங்கிக் கொண்டு உள்ள இடம், மற்றும் நம் சூரியன் இருக்கும் இடம், நம் அண்டத்தின் மையப் பகுதியான , சிவம் (வெறும் கண்களுக்கு Orion Constalatian – ல் தெரியும் – சிவம்) அதன் சீரான இயக்கம் தெரிந்தவர்கள் ஞானிகள் என்கிறார். அந்த சிவம் இருக்கும் இடத்தை 20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அறிவித்தவர் சிவன். அந்த ஞானிகள் சிவனை அறிந்தவர்கள் என்கிறார். சிவன் அறிவித்ததை நம் திருச்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருமால் , தகுந்த தரவுகளுடன் , வானில் காட்டினார். அதன தூரங்களை அளந்து காட்டினார். அதனால் தான் அவர் உலகளந்த பெரும் ஆள் எனப்பட்டார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *