சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

107. மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்,
மலர்ந்த பூ மயக்கம் வந்து, அடுத்ததும், விடுத்ததும், புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி, பூமி மேல் விழுந்ததும்.
இனங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே ?

108 வகையான தாதுக்களைக் கொண்டுதான் இந்த வையகம் உருண்டு திரண்டு , பூ மி ஆக மலர்ந்து உள்ளது. உலோகம் அலோகம் காற்று உப்பு அமிலம் காரம் எனும் அனைத்தையும் உள்ளடக்கி பிசைந்து உருவானது தான் இந்த உருண்டு பறந்து கொண்டு இருக்கும் உலகம். இந்த மலர்ந்த வையகத்தில் மலர்ந்த பூ என்றால் உயிர்கள். உயிர்கள மலர்வதும், மயக்கம் வந்து விழுவதும், எழவதும், அடுத்து மலர்வதும், விழுவதும், அடுத்த உயிர் எடுப்பதும் இப்படி மாறி மாறி நடப்பதும்.. நம் உடலில் ஐந்து புலன்கள் இருப்பது போல் , மற்ற உயிர் இனங்களிலும், ஐந்து புலன்கள் இருப்பதும் அவை பூமி மேல் பொறி கலங்கி விழுவதும் நிகழ்ந்து கொண்டே இருப்பது தான். பொறி என்றால் புலன்கள் வேலை செய்யத் தேவையான கருவிகள் . யாவை? கண் உள்ள உயிரினங்களுக்கு கல்லீரல் இருக்கும். காது உள்ள உயிரினங்களுக்குத் தான் சிறு நீரகம் இருக்கும். நாக்கு சுவை அறியும் உயிரினங்களுக்குத் தான் இருதயம் இருக்கும். முகர்ந்து பார்க்கும் உயிரினங்களுக்கு நுரையீரல் இருக்கும். தொடு உணர்வு உள்ள உயிரினங்களுக்கு, மண்ணீரல் இருக்கும். நகராத தொடு உணர்வு உள்ள உயிரினங்கள் நேரடியாக மண்ணில் இருந்து சத்துக்கள் பெற்றுக் கொள்ளும். இப்படி ஐம்புலன் பொறிகளும் இறந்து பூமி மேல் விழுவதும். இப்படி பல்வேறு வகையான , உயிர் இனங்களில் கலங்கி (இறைவன் ) நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே ? என இறைவனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *