சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

106. ஆதியானது ஒன்றுமே, அனேக அனேக ரூபமாய்,
சாதி பேதமாய் எழுந்து, சர்வ சீவன் ஆனபின்,
ஆவியோடு ஆடுகின்ற , மீண்டும் அந்த சென்மமாம்,
சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பரே !

ஆதியான மூவர் , வெளி , காற்று , வெப்பம்., மூன்றும் ஒன்றி , சேர்ந்தது தான் சோதி. வெளி என்றால் அதில் Sound, Light, Heat மூன்றும் சேர்ந்ததுதான். அதுதான் ஆதியானது ஒன்றுமே என்பதின் அர்த்தம். அந்த சோதிதான் அநேக ரூபங்களாய், உயிர்களாக , உடல் எடுத்து, சாதி பேதமாக , சர்வ சீவன்களாக ஆகின்றன என்கிறார். ஆவி என்றால் , தண்ணீர் வெப்பம் அதிகமாகி கொதிநிலையைத் தாண்டினால் ஆவி ஆகி , காற்றாகி கண்களில் இருந்து மறைந்து விடும். வெப்பமான காற்று மேல் நோக்கி தான் செல்லும். மேலே போகப் போக குளிர்ச்சி அதிகமாகி, மீண்டும் தண்ணீர் ஆகி பூமியில் இறங்கும். சில வேளை குளிர்ச்சி அதிகமாகி பனிக்கட்டியாகி, பனிக்கட்டி மழை பொழியும். இப்படி உடல் ஆவியை இழந்து மீண்டும் ஆவிதான் உடல எடுக்கிறது ஆண்களின் விறைப் பையில். அதுதான் ஆவியோடு ஆடுகின்ற மீண்டும் அடுத்தடுத்த உடல்களைப் பெற்று , மீண்டும் அடுத்த சென்மம் எடுக்கிறது என்கிறார். இவ்வாறு முதலில் புரியாவிட்டாலும் அடுத்தடுத்த சென்மங்களில் இயற்கையின் விளையாட்டை புரிந்து கொண்டு , சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பார்கள் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *