105. அல்லல் வாசல் ஒன்பதும், அறுத்தடைந்த வாசலும்,
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும்.
நல்ல வாசலைக் திறந்து, ஞான வாசல் ஊடு போய்,
எல்லை வாசல் கண்டவர், இனி பிறப்பதில்லையே!.
அல்லல் வாசல் ஒன்பதும், என்றால் நாம் பிறக்கும் போது இருந்த 9 துவாரங்கள தான். ஆசை பேராசைகளை உருவாக்குவதே , இந்த வாசல்கள் தான். அதனால் தான் அதை அல்லல் வாசல என்கிறார். பின் பருவமடையும் போது ஆண் பெண் இருவருக்கும் அறுத்தடையும் வாசல் உருவாகும். சொல்லும் வாசல் என்றால் நாம் வார்த்தைகளைப் பேச வயிற்றிலிருந்து காற்று உந்தி வெளியே வரும் காற்றுதான் , தொண்டையில் அதிர்வாகி சத்தமாக, வார்த்தையாக வெளிவருகிறது. சொல்வதற்கு வாய் ஒன்றும். அதை உருவாக்க மூக்கின் இரு துளைகள். அதே போல் பேசுவதை நாமே கேட்டால் தான், நாமே பேச முடியும். அதை கேட்க முடியா விட்டால், ஊமைதான். ஆகவே சொல்லும் வாசல், ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும் என்றால், நாம் இறைவனை உணர்ந்த போது, அதை வெளியே சொல்ல வார்த்தைகளின்றி , சொம்மி விம்மி நிற்பதும் என்கிறார். ஆழ் மனதை, அமைதியான சில மூச்சு பயிற்சி, தியான பயிற்சி , என , கடந்து நல்ல வாசலைத் திறந்து, ஞானம் எனும் புத்தியின் ஊடே கடந்து போய் , எல்லை வாசலான தலை உச்சியில் , உள்ள வாசலை கண்டவர் இனி பிறப்பதில்லை என்கிறார். ஏனெனில் அவர்களுக்கு எதை கேட்கிறார்களோ அதன் விடை உடனே கிடைக்கும். அதன் பலன்களும் , நல்லதோ, கெட்டதோ, கூடவே வரும் எனும் அறிவும் தெளிந்து விடும். எனவே கேட்பது நின்று விடும். ஆகவே இனி பிறப்பு இருக்காது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments