103. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம், விளைவு நின்றதில்லையே!
வெளி பறந்த தேகமும், வெளிக்குள் மூல வித்தையும்,
தெளியும் வல்ல ஞானிகள், தெளிந்திருத்தல் தின்னமே !.
வேல் வடிவில் உள்ள , உயிர் பெற்ற உடல் , விந்துவாக (முதுகுத்தண்டு) கருமுட்டையில் தைத்தால் மனித உடல் உருவாகிறது. அது ஆண், அல்லது பெண் என்று எது முடிவு செய்கிறது? பெண்களின் மூலாதாரத்தின் திருவரங்கத்தின் மேல் பகுதியில் வில் வடிவில் வளைந்து சிறு முனையாக , வெளியில் தெரியும், யோனியால் உருவாகும் புனல் (நீர்) தான் ஆணா அல்லது பெண்ணா என முடிவு செய்வது. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும் என்றால், தான மணந்த ஆணை விழிகளால் பார்த்தவுடன் , அதீத காதல் இருந்தால் , நீர் உருவாகும். அந்த புனல் கலந்த விந்து கருமுட்டையை தைத்தால், அது ஆணாக மாறும். அந்த புனல் உருவாகாமல் , வெறும் விந்து கருமுட்டையை தைத்தால் அது பெண்ணாக மாறும். எனவே ஆண் வாரிசு வேண்டுமெனில்,தான் கை பிடித்த பெண்ணை , காதலுடன் அனுகினால் , ஆண் குழந்தை உறுதி. இதை வெளியிலே பிதற்றலாக எதை கூறினாலும், விளைவு நின்றதில்லை என்கிறார் . இப்படி கிடைத்த வெளி பரந்த தேகமும் , அதாவது வெளியால் உருவாகிய ஐம்பூதங்களால் ஆன உடலும், வெளிக்குள் மூல வித்தையும் என்றால் , பெண்ணால் உருவான ஆணின் விறைப் பைக்குள் மூல விதை உருவாகிறது. இப்படி இயற்கையின் உண்மையை , உணர்ந்த ஞானிகள் , தெளிந்தவர்கள் என்பது தின்னம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments