102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம்,
வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன்.
தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம்,
வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.
(அந்த காலத்தில் )ஒளி வீசக் கூடிய, காசிப் பட்டிணம் வந்து தங்குவோர்களின் மேனி , வெளியில் உள்ள சோதியை உருக்கி செய்தவன் விசுவநாதன். (இறைவன்). அந்த காசியில் கங்கை கரையில் இருந்து செப்புகின்ற தாரக மந்திரம் எப்படி இருக்கும் என்றால், ரத்த சோகையான வெளிரிய , ராம ராம எனும் ராமமிர்த நாமம் என அந்த நாமத்தை சொல்கிறவர்களை இகழ்கிறார். ஆக சிவ வாக்கியர் பாடல் என்றால் அதில் ராம ராம என பாடியிருக்கிறார். ஆகவே இதை கேட்கமாட்டோம் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை என்று அர்த்தம்.
Tags: சிவவாக்கியம்
Lenin Pandy.: ஐயா இந்த பாடலை இன்னும் சற்று விளக்க முடியுமா. விளக்கம் எனக்கு குழப்பமாக உள்ளது. நன்றி ஐயா
ravi2251964: எந்த வரியில் குழப்பம்.
Lenin Pandy.: 102. ……..
தெளியு கங்கை உடனிருந்து செப்புகின்ற தாரகம்,
வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.
……..அந்த காசியில் ரத்த சோகையான வெளிரிய , ராம ராம எனும் ராமமிர்த நாமம் என அந்த நாமத்தை சொல்கிறவர்களை இகழ்கிறார். ஆக சிவ வாக்கியர் பாடல் என்றால் அதில் ராம ராம என பாடியிருக்கிறார். ஆகவே இதை கேட்கமாட்டோம் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை என்று அர்த்தம்.
மேற்கண்டவை தாம் ஐயா
ravi2251964: இராவணன் ஆழுமைக்குள் இருந்த குளிர்ச்சியான ஊட்டி , மலைப் பகுதியான சீதையை , அடைய பேராசையுடன் வந்தவன் தான் இராமன். இப்பொழுது புழக்கத்தில் உள்ள இராமாயணம் உண்மை கதை அல்ல. உண்மைகளை மறைத்து புனையப்பட்ட புராணம். கலிகாலத்தில் அவர்களின் ஆட்சி அதிகாரத்தால் வரலாறுகளை மறைத்து, ராமன் போன்ற வேடதாரிகள் கடவுளாக்கப்பட்டு, ராம, ராம என்ற மந்திர உச்சாடனங்களை இகழ்ந்து பாடியது. தான் அந்த வரியில் உள்ள வெளிய தோரி ராம ராம எனும் வரிகள். காசி கங்கை (மங்கை) எனும் கரையில் அமைந்துள்ளது. அங்கே தான் மௌரிய பேரரசால் ராம , ராம எனும் நாமம் அந்த காலத்தில் காசி விசுவநாதர் கோவிலில் , உச்சாடனங்களை , இகழ்ந்து பாடுகிறார். இராமயணம், பொய் புராணம் என்று 1500 ஆண்டுகளுக்கு முன் அனைவருக்கும் தெரியும் . அதனால் தான் | உன்னுடைய இராமாயணம் இங்கு வேண்டாம் | எனும் சொல்லாடல்.