101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன்,
நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும்,
பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும்.
பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!.
பச்சை மண் பதுப்பிலே என்றால் , தாயின் வயிற்றில் கருமுட்டையில் புழு பதித்த வேட்டைக்காரன். கரு உருவாகியதிலிருந்து, அந்த குழந்தை எப்படி உருவம் அமைய வேண்டும், அதன் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என நித்தமும் தாய் நினைக்கிறாளோ அப்படியேயும். குழந்தை பிறந்து வளர்ந்த பின் அவரவர்கள் தன் வாழ்வு எப்படி அமைய வேண்டும், நம் உடல் எப்படி இருக்க வேண்டும், நோயற்று இருக்க வேண்டும், என எப்படி எல்லாம் நினைக்கிறோமோ? அப்படி எல்லாம் நடக்கும். எண்ணம் போல் வாழ்க்கை. அப்படி வாழ்ந்து முடிந்தவுடன் பச்சை மண் இடிந்து பறந்த தும்பி ஆயிடும். இது தான் பிரான் நம்முடன் இருந்து நம் வாழ்வியலில் கலந்து நாம் நினைப்பதை நடத்திக் கொண்டு உளனான் . நாம் அதை அறியாமல் , நாம் செய்கிறோம் என்று எண்ணி, நடந்து விட்டால் சந்தோசம் அடைந்தும், நடக்காவிட்டால் வேதனைப் பட்டுக்கொண்டும் உள்ளோம். இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் பித்தர்களே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments