100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா !
கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும்,
சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே,
வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!.
இந்த பரந்த பெரும் பரம் உன்னுடையது என்பதால் எனக்கு வேறு பயமில்லை. இந்தப் பெரு வெளி உன்னுடையது என்பதால் உன்னை வணங்கி , கரம் எடுத்து குவிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. என் சிரம் உருகி , நீ உள்ளே இருப்பதால் அமுதளித்து, சீராக உலாவிக் கொண்டு இருக்கும் நாதனே. நீ கொடுத்த இந்த ஓம் நமசிவாய எனும் அண்டத்தில் உள்ள அத்தனை விசயங்களையும், உள் அடக்கிய , சிறிய மந்திரம் எனக்கு வரமாகவும், உறமாகவும் உள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments