99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும்,
நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும்,
நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே.
ந – நிலம் ம – நீர் சி – வெப்பம் வா – காற்று ய – வெளி என ஐந்து எழுத்துக்களும், நாம் வாழத் தகுந்த இந்த பூமியாக ஐம்பூதங்களாக நிலைகளாக நிற்கின்றது. அது மட்டுமல்லாமல், சூரியன், நிலா, மற்றும் நம் கோள்கள், அண்டத்தில் உள்ள மற்ற அனைத்தும் நிற்கும் நிலைகளாக இருக்கின்றது.
நம் வரலாற்றையும், நம் கடவுளர்களையும், கொச்சைப் படுத்தும் விதமாக அவசர குடுக்கைகளாள் புனையப்பட்ட மகாபாரத, ராமாயண புராணமான மாய்கை கதைகளாகவும் , நமசிவாய அஞ்சு எழுத்துக்கள் இருக்கிறது என்கிறார்.
அதே போல் இந்த நமசிவாய அஞ்சு எழுத்தும், நம் ஐம்புலன்களாகவும், நம் உடலாகவும், நம் உள்ளே இருக்கிறது என்கிறார்.
அந்த நமசிவாய உண்மையை நன்கு புரிந்து கொண்டு, உணர்ந்து உரை செய் நாதனே என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments