சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று

சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று

97. வட்டம் என்று உம்முளே மயக்கி விட்டது இவ்வெளி,
அட்டரக் கரத்துளே, அடக்கமும், ஒடுக்கமும்,
எட்டும் எட்டும் எட்டுமாய், இயங்கு சக்கரத்துளே,
எட்டலாம் உதித்த எம்பிரானை நாமறிந்த பின்.

இந்த விண்வெளி வட்டம் போல் நம்முள் மயக்கி விட்டது . நாம் வானத்தில் பார்த்தால் 180 திகிரி வட்டமாக கோளமாக தெரிகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் கிழே இருந்த வானம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து மேலிருந்த வானமெல்லாம் கீழே சென்று 180° தெரிகின்றது. இப்படி 360 திகிரி கோளமாக வட்டமாக மயக்கி விட்டது இவ் வெளி என்கிறார். ஆனால் உண்மையில் அ எனும் அட்சரத்தின் வடிவமாக நான்கு கரங்களாக , அடக்கமாக சுற்றிக்கொண்டு ஒடுங்கிக் கொண்டு உள்ளது. அதுவும் பூமி, சந்திரன், சூரியன் 8 வடிவமாக அதாவது அனலம்மா தெரிந்தவர்களுக்குத் தெரியும் பூமி சூரியனைச் சுற்றி 8 வடிவமாகத் தான் சுற்றிக் கொண்டு உள்ளது. அதுபோலதான், சந்திரன் பூமியைச் சுற்றி 8 வடிவமாகவும், சூரியன் , சக்தி மையத்தைச் சுற்றி 8 வடிவமாகவும் சுற்றிக் கொண்டுள்ளது. இதையெல்லாம் அறிந்தால் எட்டலாம் நம் , சுழுமுனையில் எம்பிரான் உதித்ததை நாம் அறிந்த பின். பூமியும் சந்திரனும் ஒரே திசையிலும், சூரியன் பூமிக்கு எதிர்திசையிலும் சுற்றிக் கொண்டு உள்ளது. சகதிமையம், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே திசையில் சுற்றிக் கொண்டே , நம் Galaxy-ன் மையத்தை நோக்கி ஒடுங்கிக் கொண்டுள்ளது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *